பிரதான செய்திகள்

விரைவில் பரீட்டை பெறுபேறுகள்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று இலட்சத்து ஐம்பத்து ஆறாயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இதன்போது வத்தளை மற்றும் பண்டாரவளை பிரதேசங்களில் இருந்து விசேட தேவையுடைய மாணவர்கள் இரண்டு பேரும் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன் அவர்களின் அசௌகரியத்தை முன்னிட்டு பரீட்சைக்கான விடைகளை குரல் ஒலிப்பதிவின் மூலமாக வழங்கவும் சந்தர்ப்பமளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 5ம் திகதி வெளியிடப்படும்?தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 5ம் திகதி வெளியிடப்படவுள்ளது.

திட்மிட்டவாறு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 5ம் திகதி பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமார இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பரீட்சையில் 356,000 மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா மாணவி படுகொலை! மன்னார் மறைமாவட்ட பரிபாலகர் ஆயர் கண்டனம்

wpengine

நிவாரணம் தொடர்பில் மஸ்ஜித் சம்மேளன நிர்வாகிகளுடன் அமைச்சர் றிசாட் சந்திப்பு

wpengine

கண்ணில் மண்ணை தூவிவிட்டு தேவையானதை அரசு செய்கின்றது.

wpengine