பிரதான செய்திகள்

விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

290 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட இலங்கை விமானப் படையின் விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும் இன்று நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உள்ளூர் விமான சேவையையும் ஆரம்பித்து வைத்தார். 

புதிதாக அமைக்கப்பட்ட விமான ஓடுபாதையில் எம்.ஏ.60 விமானத்தின் மூலம் வந்து இறங்கிய ஜனாதிபதிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும்  பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பளித்தனர்.

இதனையடுத்து மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வெற்றிலை கொடுத்து வரவேற்றார்.

அதன் பின்னர் விமான நிலையத்துக்கான நினைவுக் கல்லைத் திரை நீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி விமான நிலையத்தினையும் திறந்து வைத்தார்.

1958 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்ட இலங்கை விமானப் படையின் மட்டக்களப்பு விமான நிலையம், 1983ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி விமான சேவைகள் அமைச்சினால் விமானப் படைக்காகவும் சிவில் பாதுகாப்புக்காகவும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

Related posts

கடந்த 05 வருடங்களாக அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு என்ன கிடைத்தது?

wpengine

அரச ஊழியர்களுக்குஇடைக்கால கொடுப்பனவை பரிசீலிக்குமாறு கோரிக்கை- வாசுதேவ நாணயக்கார

wpengine

லங்கா சதொச அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்தது!

Editor