பிரதான செய்திகள்

விமல் கைது! வாகன மோசடி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் விமல் வீரவங்ச நிர்மாணம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக பதவி வகித்த வேளை, அந்த அமைச்சிற்கு சொந்தமான வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்தநிலையில் இன்றையதினம் அவர் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அங்கு சென்ற அவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

காத்தான்குடி நகர முதல்வரின் அதிரடி நடவடிக்கை! தினக்குரல் பத்திரிகைக்கு தடை

wpengine

வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை அதிபரின் கேவலமான செயல்! பலர் கண்டனம்

wpengine

தன்னை தானே சுட்டுக்கொலை! ராஜிதவிடம் வாக்குமூலம்

wpengine