பிரதான செய்திகள்

வித்தியா கொலை! மாவை சேனாதிராஜாவிடம் விசாரணை

வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.எம். றியாழ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அடுத்த தவணைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஏனைய இரண்டு பொலிஸ் அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலம் அரச சட்டத்தரணியால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் கால அரசியல்வாதி நான்அல்ல ஷிப்லி

wpengine

வடக்கு மக்களுக்கு மஹேல ஜயவர்தன குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி

wpengine

மததலங்களில் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஆப்பு

wpengine