பிரதான செய்திகள்

வித்தியாவுக்கு ஒரு நீதி? ஹரிஷ்ணவிக்கு ஒரு நீதியா? 6 மாதங்கள் கடந்தும் ஹரிஷ்ணவியின் படுகொலைக்கு நீதி இல்லை!

எனது மகள் ஹரிஷ்ணவி படுகொலை செய்யப்பட்டு ஆறு மாதங்களாகிவிட்டன. எனினும் இன்று வரையிலும் நீதி கிடைக்கவில்லை.

எனவே, எனது மகளின் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட வேண்டும் என ஹரிஷ்ணவியின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி பாடசாலை மாணவி ஹரிஷ்ணவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையில் ஹரிஷ்ணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்மைக்கான தடயங்கள் காணப்படுவதாகதெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனையின் முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே முழுமையான விவரம் தெரியவரும் என்று வவுனியா சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அயல் வீட்டைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். ஹரிஷ்ணவியின் கொலைக்கு நீதி கோரி வடக்கில் கடையடைப்புகள் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

மாணவர்களும் நீதி வேண்டிப் போராட்டங்களை மேற்கொண்டனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்த எந்தத் தகவல்களும் வெளிவரவில்லை.

வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு தவணையிடப்படுகின்றது. படுகொலை செய்யப்பட்ட ஹரிஷ்ணவியின் 14ஆவது பிறந்ததினம் நேற்றாகும்.

ஆனால், ஹரிஷ்ணவியின் படுகொலைக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. எனது மகள் கொல்லப்பட்டு இன்றுடன் ஆறுமாதங்கள் கடந்துள்ளன.

மகளுக்கு இவ்வாறு கொடூரம் இழைத்தவர்கள் இன்றுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்ற வேண்டும்.

பொலிஸார், சட்டவல்லுநர்கள் எனது மகளின் படுகொலைக்கு நீதி பெற்றுத்தர வேண்டும். கடந்த வருடம் பங்குனி மாதம் வெளிநாடு செல்வதற்காக ஆவணங்கள் அனைத்தும் வெளிநாட்டுத் தூதரகத்தில் ஒப்படைத்து அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

ஹரிஷ்ணவி இந்த வருடப் பிறந்தநாளை தனது அப்பாவுடன் வெளிநாட்டில் கொண்டாடப் போகின்றேன் என்று கூறியிருந்தாள்.

அதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருந்தாள். ஹரிஷ்ணவியின் 4ஆவது பிறந்த தினம் முடிந்து எனது கணவர் வெளிநாடு சென்றார்.

அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் பிறந்த தினத்தை அவள் கொண்டாடுவதில்லை. அப்பாவிடம் சென்று பிறந்தநாள் கொண்டாடுவதே அவளுடைய விருப்பம்.

எனது மகளின் ஆசைகள் அனைத்தையும் கொடூரர்கள் நிராசையாக்கிவிட்டனர். அந்தக் கொடூரர்கள் கண்டுபிடிக்கப் படவேண்டும். தண்டிக்கப்பட வேண்டும்.

• எங்களது வீட்டின் பக்கத்து வீட்டிலுள்ள நபரை சந்தேகத்தில் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அநாவசிய பிரச்சினைகள் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளன .

நாம் முன்பு குடியிருந்த வீட்டில் தற்போது வசிப்பதில்லை. ஹரிஷ்ணவியின் 31ஆம் நாள் கிரியைகளின் பின்னர் எனது உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றேன்.

எவ்வாறாயினும், தனது மகளின் படுகொலைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும். காலத்தை வீணடிக்காது நியாயத்தை வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

……………………………..

timthumb.php வித்தியாவுக்கு ஒரு நீதி?? ஹரிஷ்ணவிக்கு ஒரு நீதியா??: 6 மாதங்கள் கடந்தும் ஹரிஷ்ணவியின் படுகொலைக்கு நீதி இல்லை! timthumb
வித்தியாவின் படுகொலை வழக்கில் ஆர்வம் காட்டும் நீதித்துறையினா்கள்,  தமிழ் ஊடகங்கள்  ஹரிஷ்ணவியின் படுகொலைக்கு வழக்கில் மட்டும் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை???  காரணம் என்ன??

வித்தியாவும்  பாடசாலை மாணவிதான்,  ஹரிஷ்ணவி   பாடசாலை மாணவிதான்.   இருவருமே  பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

வித்தியாவின் படுகொலை    சம்பந்தமான  இதுவரை 13பேர் கைதுசெய்யப்பட்டு  நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுள்ளார்கள் . 

ஆனால்  ஹரிஷ்ணவியின்   படுகொலை வழக்கில் இதுவரை யாருமே கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில்ஆஜர்படுத்தப்படவில்லை காரணம் என்ன?

காரணம் இதுதான். வித்தியா வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள்  சாதாரண  ஏழைகள். ஆனால்,,   ஹரிஷ்ணவி  படுகொலை  வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் ( பக்கத்து வீட்டிலுள்ள ஒரு நபரை சந்தேகத்தில் கைதுசெய்துள்ளதாக  சொல்லப்படுகிறது) பணம் பலம்,  அரசில் பலம்,  அதிகார பலம்,  ஊடக பலம்  படைத்தவா்கள்.

அதனால்..  ஹரிஷ்ணவி  படுகொலைக்கு  எப்பொழுதுமே  நீதிகிடைக்கப்போவதில்லை.

625.368.560.350.160.300.053.800.560.160.90-32 வித்தியாவுக்கு ஒரு நீதி?? ஹரிஷ்ணவிக்கு ஒரு நீதியா??: 6 மாதங்கள் கடந்தும் ஹரிஷ்ணவியின் படுகொலைக்கு நீதி இல்லை! 625
ஹரிஷ்ணவி  படுகொலைக்கு வழக்கு  மூடிமறைக்கப்படுகிறது. காரணம் யாது??  யாரால் ?  என்பதை கீழே  உள்ள  லிங்கை   அழுத்தி (செய்திகளை)   வாசிப்பதன்  மூலம்  புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

வவுனியா மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலையில் ‘லங்காஸ்ரீ’ இணையத்தள உரிமையாளர் ஸ்ரீகுகனின் தொடர்பு என்ன?? (அதிர்ச்சி தகவல்கள்!!)

மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலையும், கொலைக் குற்றவாளியை தப்பவைக்க முயற்சித்த “லங்காஸ்ரீ” இணையதளமும்: அதிர்ச்சித் தகவல்கள்.!!

Related posts

மன்னார்,வவுனியா வீதியில் கடல் அலை

wpengine

35 பன்சார் அலங்கார உற்பத்தியாளர்களுக்கான உபகரணங்கள் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வழங்கி

wpengine

ஹக்கீம்-ஹசன் அலி முறுகல் மீண்டும் சமரச முயற்சி

wpengine