(FAHMY MOHAMED-UK)
மதிப்புக்குரிய Ahamed Nazeer Zainulabdeen ,தற்போதைய கிழக்கு முதலமைச்சராகவும் SLMCன் பிரதித் தலைவராகவும் உள்ளார்.இவர் நஜீப் ஏ மஜீதின் இராஜினாமாவிற்குப் பின்னர் 06:02:2015 கிழக்கு மாகாண முதலமைச்சரானார்.இன்றும் ஓரிரு நாட்களில் பதவி முடிவடைய உள்ளது.
உண்மையில் 1997-1999ம் ஆண்டு காலப்பகுதியில் பொரலையில் இவருடன் இணைந்து பணியாற்றும் வாயப்புக் கிடைத்தது.நான் பல்கலைக்கழகத்தில் இருந்த போது இலங்கை முஸ்லீம்கள் தொடர்பில் ஆவணம் தயாரிக்கும் வகையில் அமைப்பு ஒன்றை உருவாக்கினார்.
பின்னர் இவரது வியாபாரம் மற்றும் இதர விடயங்களால் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் இவரது அரசியல் பிரவேசம் ஆரம்பமானது.பேரியல் அஷ்ரபின் நுஆ கட்சியில் முக்கிய நபராகவும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவாகவும் பதவி வகித்தார்.
வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி வியாபரங்களில் ஈடுபட்ட இவர் அரசியலை வியாபாரத்தை நகர்த்தும் மார்க்கமாகவே வைத்திருந்தார்.குறிப்பாக தாருஸலாம் கட்டிடமும் அதற்கு அண்மிக்க இவருக்குச் சொந்தமான பலகோடிப் பெறுமதியான கட்டிடமும் சர்ச்சைக்கு உள்ளானது.
SLMC கட்சியை ஹகீம் தன்வசப்படுத்தினாலும் கட்சிக்கட்டிடம் நசீர் அஹமட் சார்பான அணியிடமே இருந்தது.இதற்காக உயர்நீதிமன்றத்தில் வருடக்கணக்காக வழக்கு நிலுவையில் இருந்தது.இந்த நிலையில் பேரியல் அஷ்ரப் அணி முற்றாக அரசியலில் இருந்து ஒதக்கப்பட்டது.
இதனால் நசீர் அஹமட்டிடம் கட்டிடம் வசமானது.பலமுறை SLMCல் இணைவதற்கு முயன்றும் ஹகீம் அணியினர் குறிப்பாக பஷீர் இடம் கொடுக்கவில்லை.
தனது எதிர்கால அரசியலை அடைந்து கொள்ள ஹகீமிடம் செஸ் ஆட்டம் ஆடத் தொடங்கினார்.இதற்காக பசீருக்கும் தலமைக்கும் இடையில் விரிசல் ஆரம்பமானது.அதேநேரம் கட்சிக் கட்டிடத்தை ஏதோ ஒருவகையில் ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் பலரிடம் இருந்து நசீர் அஹமட்டுக்கு நெருக்கடியானது.
இந்த பல கொடுக்கல் வாங்களுக்கு மத்தியில் பிரதித்தலைவர் மற்றும் தேசியப்பட்டியல் நிபந்தனைகளுடன் SLMC கட்சிக்குள் மீண்டும் இணைந்தார்.தேசியப் பட்டியலுக்குப் பதிலாக முதலமைச்சரானார்.பசீர் சேகுதாவுது வெளியே போனார்.
இவரை முதலமைச்சராக்கும் நிர்ப்பந்தம் தலமைக்கு இருந்தது.உண்மையில் SLMC தலைவர் இவரை முதலமைச்சராக்கிய விடயத்தில் சரியான முடிவே எடுத்தார் என்றே கூறவேண்டும்.ஏனெனில்
1-கட்சிக்குள் நிலவிய தேசியப்பட்டியல் பிரச்சனைக்கு இவரது நியமனத்தால் ஓரளவு நிம்மதி
2-TNA கட்சியின் தலமைகளுடன் இவரது தொடர்பு இரகசியமாக நிலவி வந்தது.இந்த ஆளுமையால் பெரும்பான்மை TNA உறுப்பினர்களை வைத்தே ஆட்சியை சிறப்பாக முடித்தார்.
3-SLMC உறுப்பினர்களை மட்டுமல்ல ஆரிப்,சிப்லி போன்றவர்களை சில சலுகைகளை வழங்கி தொடர்ந்து பொம்மைகளாக வைத்திருக்கும் வசதி இருந்தது.
4-முஸ்லீம் முதலமைச்சர் என்ற SLMC கோஷத்தை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்
5-கிழக்கில் செல்வாக்கு உள்ளவர்களை முதலமைச்சராக்கினால்??,,அது தலமைத்துவத்திற்கு ஆப்பு.இதனால் செல்வாக்கு இல்லாதவரை முதலமைச்சராக்கினார்.
இருந்தும் முன்னைய முதலமைச்சர் சந்திரகாந்தனை விட குறைவான செயற்பாடும் நஜீபைவிட வேகமான செயற்திறனும் உள்ளவராக சேவையாற்றினார்.சந்திரகாந்தனுக்
அதேநேரம் மாகாணசபைக்குரிய அதிகாரம் மற்றும் அந்தஸ்தை எந்த சந்தர்ப்பத்திலும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்றார்.ஆளுமை மிக்க முதலமைச்சராக இவரால் மட்டுமே செயற்பட முடிந்தது பாராட்டத்தக்கது.
அதேநேரம் அபிவிருத்தி விடயத்தில் மாகாணத்தின் முதலமைச்சர் என்பதை மறந்து தனது ஊருக்கே அதிக முக்கியத்துவம் வழங்கியதே இவரது பலவீனமாகும்.மட்டக்களப்பில். ஹிஸ்புள்ளா,அமீரலி,அலிஸாஹிர் மௌலானா,பசீர் போன்றவர்கள் தங்களுக்கான வாக்கு வங்கியை பிரதேசரீதியாக வைத்துள்ளனர்.எந்தவித அரசியல் பின்னனியோ,வாக்கு வங்கியோ வைத்திருக்காத முதலமைச்சர் தனக்கான இடத்தை அமைத்துக் கொள்ள மிகவும் தீவிரமாக இருந்தார்.இதன் விளைவு மாகாணத்தின் மற்றைய இடங்களில் பாராபட்சமாகவே செயற்பட்டார்.
மேலும் சமூகம்சார்ந்த விடயங்களில் மாகாணசபையில் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.குறிப்பாக கிழக்கு முஸ்லீம்களின் காணிப்பிரச்சனை,மீள்குடியேற்றம்
இவர் பிரதமர் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களுடான நெருங்கமான உறவுகளால் ,,தனது கட்சி முஸ்லீம்களின் உரிமைகளை வென்றெடுக்கும் என் மக்களின் எதிர்பார்ப்பை வீணாக்கினார்.தனது பதவியை எப்படியும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் காட்டிய ஆர்வமும்,சூழ்ச்சிகளாலும் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் வெறுப்புக்கு உள்ளானார்.
கடந்த மாகாணசபை திருத்தச்சட்டம் மற்றும் (18&20)இதரசட்சங்களை மனச்சாட்சிக்கு முரணாக நின்று ஆதரித்தார்.இந்த சமூகத்தின் எதிர்கால பிரதிநிதித்துவ அரசியல் அதிகாரத்தை குழிதோண்டி புதைக்க இவரே இறுதி நேரத்தில் காரணமானார்.நாளை இவருக்கே இந்த சட்டத்தால் பிரதிநிதித்துவம் இல்லாது போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
வடமாகாண சபை தமிழ்மக்களின் உரிமை மற்றும் அதிவிருத்திக்காக அக்கபூர்வமான நடவடிக்கைகளில் தேவையானபோது மத்டிய அரசுடன் இணைந்தும் எதிர்த்தும் செயலாற்றுகிறது.இவரோ மத்திய அரசுக்கு இயலுமானவரை தன்னை நல்லவராக காட்டுவதற்கு எடுத்த முயற்சிகளால் முஸ்லீம் சமூகம் காட்டிக் கொடுக்கப்பட்டது.
இருந்தும் SLMC இந்த சமூகத்திற்கு முஸ்லீம் முதலமைச்சரை கிழக்கில் அமைத்தது சாதனையே.துரதிஷ்டவசமாக இனிவரும் காலங்களில் நடக்க இருக்கும் புதிய தேர்தல் முறையில் இதனை ,குறிப்பாக முஸ்லீம் முதலமைச்சர் என்ற பதவிக்கே இடமில்லை என்பதே உண்மையாகும்.
ஆகவே முஸ்லீம் சமூகம் தன்னை பிரதேச மற்றும் இனரீதியாக கூறுபோட்டு அரசியல் நடாத்துவது ஆபத்தானதாகும்.தங்களின் இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தி தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைவதே பாதுகாப்பாக இருக்கலாம்.இதற்காக முஸ்லீம்களுக்கிடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும்.இதன்மூலம்தேசிய அரசியலில் நாம் பலமானவர்களாக இருக்கமுடியும்.
Mob:00447870763570