பிரதான செய்திகள்

விடைத்தாள் திருத்தும் பேராசிரியர்களுக்கான கொடுப்பனவு 90% ஆக அதிகரிப்பு!

விடைத்தாள்களை சரிபார்ப்பதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூடிய விரைவில் வருவார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது, தற்போது பேராசிரியர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கான கொடுப்பனவு 90% க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசித்து, 2 மாதங்களுக்கு முன், உதவித்தொகையை உயர்த்தி, கூட்டு உதவித்தொகையை, 2,000 ரூபா உயர்த்தினோம். 80 கிலோமீற்றருக்கு மேல் பயணிப்பவர்களுக்கு, 2,900 ரூபாவை உயர்த்தினோம். இதன்படி கொடுப்பனவுகள் 90 வீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாகாரின் 100 ஆவது பிறந்ததினம்

wpengine

இந்தியா அல்ல முழு உலகமும் மாறி விட்டது, போராட்டம் செய்தோம் என்பதற்காக இன்னமும் பகைமையா ?

Maash

இன அழிப்பின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மன்னாரில்

wpengine