பிரதான செய்திகள்

விடைத்தாள் திருத்தும் பணி 68 பாடசாலைகள் மூடப்படும்!

சாதாரண தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணியின் காரணமாக நாட்டில் உள்ள 68 பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

 

இதன்படி எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை குறித்த 68 பாடசாலைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணியில் 62 ஆயிரம் பணியாளர்கள்வரை செயற்படுவார்கள் எனவும், இதன் முதற்கட்டமாக 55 நகரங்களிலுள்ள 87 பாடசாலைகளில் குறித்த விடைத்தாள்கள் திருத்தும் பணி ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த 68 பாடசாலைகளையும் தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளும் அடுத்தவருட முதலாம் தவனைக்காக ஜனவரி 2 ஆம் திகதி திறக்கப்படும் என கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

ஒரு லச்சம் வேலைவாய்ப்பில் வட மாகாண மக்களுக்கு முன்னுரிமை

wpengine

தீவிரவாத செயற்பாடுகளுக்கு மரண தண்டனை

wpengine

மலையகத்தில் மரக்கறிகளின் விலைகள் உயர்வு!

Editor