பிரதான செய்திகள்

விடுதலைப் புலிகள் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் சிறுவர்களை பலவந்தமாக கடத்தி சென்றார்கள்

நான் அறிந்த மட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளே வீடுகளில் இருந்த இளைஞர் யுவதிகள் மற்றும் சிறுவர்களை பலவந்தமாக கடத்திச் சென்று யுத்தத்தில் ஈடுபட வைத்தனர் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்களில் பலர் காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றார்கள்.

அவ்வாறான பெற்றோர்களிடம் கேட்டால் கூறுவார்கள், தமது பிள்ளைகளை கடத்தி சென்றது யார் என்று. பலர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர்.

அரசாங்கம் என்பது ஒரு அமைப்பல்ல, எனவே அரசாங்கம் என்ற வகையில் ஒவ்வொரு பிரஜையினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் அவர்கள் குறித்த தகவல்களைக் கண்டறிவது பொறுப்பாகும்.

எனவே அதை எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ள வேண்டும் என நான் கருதுகின்றேன்.
இலங்கையைப் பொறுத்தவரை காணாமல் போனவர்கள் விடயம் புதிய ஒன்றல்ல. நாம் வரலாற்றை பின் நோக்கி பார்த்தோமானால் 87 மற்றும் 88ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பலர் காணாமல் போயிருந்தனர்.

அதேபோல் சுனாமி பேரலையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயிருந்தனர். எனவே காணாமல் போனவர்கள் விடயத்தையும் எமது நாட்டுக்கு ஏற்ற வகையில் கையாண்டு தீர்வை காண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது.!!!

Maash

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Maash

புத்தளத்தில் 20வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

wpengine