பிரதான செய்திகள்

விடுதலைப்புலிகளினால் தற்போது சூழல் மாற்றமடைந்து விட்டது

விடுதலைப் புலிகள் எமக்கு விடுதலையைப் பெற்றுத்தருவார்கள் என்று எமது மக்கள் நம்பினார்கள், அவர்கள் கூறும் அனைத்து விடயங்களையும் நாமும் மக்களும் செய்தோம், தற்போது சூழல் மாற்றமடைந்து விட்டது என ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதை தவிர்க்குமாறு விடுதலைப் புலிகள் கோரியிருந்தமையால் ரணில் விக்ரமசிங்கவிற்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தது.

தற்போது அவரை ஆட்சியில் அமர்த்துவதற்கு கூட்டமைப்பு ஆதரவளித்துள்ளமை குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கூட்டமைப்புக்கும் ரெலோவுக்கும் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான பொறுப்பு உள்ளது.
எம்மைப் பொறுத்தவரையில் மகிந்தவா, மைத்திரியா, ரணிலா என்பது பிரச்சினை இல்லை . நாங்கள் நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை எமது மக்களுக்கு சார்பாக பயன்படுத்தவே பார்க்கின்றோம்.

அதனடிப்படையிலேயே முடிவுகளை எடுத்து வருகின்றோம், குறித்த நபர் ஆட்சிப்பீடத்திற்கு வருவதால் பாலும் தேனும் ஓடும் என்ற அடிப்படையில் முடிவுகளை எடுக்கவில்லை, அவ்வாறு நம்பிக்கையும் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் “கோ ஹோம்” என்று கோஷம் எழுப்புவதால் எவ்வித பயனும் இல்லை

wpengine

டக்ளஸ்சுக்கு தேவையான மாடுகளை ஏற்றிக் கொண்டு அந்த வண்டியிலே நானும் ஏறி வருகிறேன்’

wpengine

நஷீர் அஹமட் தடை நீக்கம்

wpengine