பிரதான செய்திகள்

விஜயதாஸ ராஜபக்ஷவும் கைதாகலாம்

ராஜபக்ஷ குடும்பத்தில் யாராவது ஒருவர் சிறையில் இருக்க வேண்டும். அப்போது தான் மைத்திரி ரணில் ஜோடிகளுக்கு நித்திரை போகும். ராஜபக்ஷ குடும்பத்தில் ஒருவராவது வெளியில் இருந்தால் இவர்களுக்கு தூக்கம் வராது. எனவே ராஜபக்ஷ என்ற பெயரைக் கொண்ட விஜயதாஸ ராஜபக்ஷவும் வெகு சீக்கிரத்தில் கைதாகலாம் என  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

ராஜகிரியிவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று நடைப்பெற்ற ஊடக சந்திப்பிலேயே  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் மைத்திரி ஜோடிக்கு ராஜபக்ஷ என்ற பெயருக்கு சரியான பயம்.  எனவே தான் ராஜபக்ஷ என யார் பெயர் வைத்திருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கின்றார்கள். தற்போது நாமல் விடுதலையான  போதும் பஸில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். எனவே ஒருவராவது சிறையில் இருக்க வேண்டும்.

Related posts

வடக்குச் சமூகத்துடனான கலந்துரையாடல்

wpengine

1000மாணவர்களுக்கு உதவி செய்த மேல் மாகாண சபை உறுப்பினர்

wpengine

ISIS அமைப்பின் முஸ்லிம் உறுப்பினர் புதுடில்லியில் தங்கியிருந்த போது கைது.

wpengine