பிரதான செய்திகள்

விஜயகலாவுக்கு என்ன தண்டனை என்பதை நாம் அவதானித்துக்கொண்டே இருக்கின்றோம்.

கண்டி இளைஞர்களுக்குப் போலவே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் இந்நாட்டு சட்டம் பொருந்தும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் அதிகாரிகள் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தை வைத்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை என்ன செய்யப் போகின்றார்கள் என்பதையும் பார்ப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனாவின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று கோட்டே ஸ்ரீ கல்யாணி தர்ம மகா சபையின் மகாநாயக்கரை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.

இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் தொடர்ந்தும் பேசுகையில், “ஒரு நாட்டுக்குள் ஒரு சட்டமே இருக்க வேண்டும். அது வடக்குக்கும் தெற்கிற்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

வடக்கினதும், கிழக்கினதும் வாக்குகளை இலக்குவைத்து இனவாதக் கருத்துக்களை முன்வைத்து வரும் விஜயகலா போன்றவர்களுக்கு என்ன தண்டனை என்பதை நாம் அவதானித்துக் கொண்டே இருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில்…

Maash

கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளது.

wpengine

கோவில் அபிவிருத்திக்காக மாகாண உறுப்பினர் சிவநேசன் நிதி உதவி

wpengine