பிரதான செய்திகள்

விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தனித்து சந்தித்து பேச்சுவார்த்தை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அந்த கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.


இவர்கள் இருவர் மட்டும் தனித்து இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இந்த சந்திப்பு தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தான் போட்டியிட போவதாகவும் அதற்கு ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் இந்த பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் கூறியிருந்தார்.

எனினும் பின்னர் சில வளைந்து கொடுக்கும் யோசனைகளை பிரதமர் முன்வைத்திருந்தார்.

இதனடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தனித்து சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதி தீர்மானத்தை எடுப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கெஜ்ரிவாலை படுகொலை செய்யப் போகிறோம். முடிந்தால் அவரை காப்பாற்றி கொள்ளுங்கள்

wpengine

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகல்

wpengine

மக்கள் கண்கானிப்பு இல்லாத இடங்களில் அதிகமாக ஊழல்- முதலமைச்சர்

wpengine