பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனை முற்றுகையிட்ட தொண்டர் ஆசிரியர்கள்

வடமாகாணத்தைச் சேர்ந்த தொண்டராசிரியர்கள் இன்றைய தினம் வடமாகாணசபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் 646 பேர் தொண்டராசிரியர்களாக இருந்து வரும் நிலையில் நேர்முகத் தேர்வு மூலம் 182 பேருக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்க தற்போது ஏற்பாடாகியிருக்கும் நிலையில் இவர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாகாணசபையின் 119ஆவது அமர்வு இன்று இடம்பெற்றுவரும் நிலையில் இவர்கள் இன்று மாகாணசபை மற்றும் முதலமைச்சர் அலுவலகங்களின் வாயில்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது நிபந்தனைகளை நிறைவேற்ற சகல உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் இன்றைய வடமாகாணசபையிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது 182 பேருக்கு நியமனம் வழங்கினாலும் ஏனைய சகலருக்கும் நிச்சயம் நேர்முகத்தேர்வு இடம்பெற்று அவர்களுக்கும் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக வடமாகாண முதலமைச்சர் இங்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரின் தேக சுகத்திற்கு இப்தார்! முன்வரிசையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்கள் பிராத்தியுங்கள்

wpengine

தேர்தல்களில் தீர்மானிக்கும் சக்திகள் எது? சிங்களக் கடும் போக்கா, சிறுபான்மை வாக்கா?

wpengine

பதியுதீனை தடுப்பு காவலில் இருந்து விடுவிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல்

wpengine