பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! விக்கியை வீட்டுக்கு அனுப்புவோம்.

வடமாகாண அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கி, மேலும் இரு அமைச்சர்களை விடுமுறையில் இருக்குமாறு முதலமைச்சர் கேட்டதன் எதிரொலியாக வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு தமிழ்தேசிய கூ ட்டமைப்பின் பிரதான அங்கத்துவகட்சி ஒன்றின் அலுவலகத்தில் பேச்சு நடந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் தருகையில்,

வடமாகாண முதலமைச்சர் அமைச்சர்கள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுத்ததன் எதிரொலியாக முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு இன்று மாலை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுமார் 20 உறுப்பினர்கள் வரை ஆதரவு வழங்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இன்று இரவே இந்த தீர்மானத்தை எடுத்து இன்று இரவே வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயிடம் கையளித்து ஆளுநர் நாளை வெளியிடும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதேவேளை முதலமைச்சர் 4 அமைச்சர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்தால் அவரை வீட்டுக்கு அனுப்புவோம் என த மிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

முதலமைச்சருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்

wpengine

இரத்தினபுரி மக்களுக்கு 10 மில்லியன் நிவாரணப்பொருட்கள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக ரிஷாட்

wpengine

இலங்கையில் கைத்தொழில்களுக்கு பாதுகாப்பு கொள்கையொன்று தொடர்ந்து அமுல்படுத்தப்பட வேண்டும்!-கைத்தொழில் அமைச்சர்-

Editor