ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ், சிங்கள மக்களின் மனங்களை வெற்றிகொண்டுள்ளார். ஆனால் தற்போது அந்த நல்லிணக்கதை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. வடக்கு முதல்வரின் செயற்பாடுகள், பிராகரன் துப்பாக்கியால் செய்ய முயன்ற மாற்றத்திற்கு நிகரானவையாக அமைந்துள்ளன என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் அரசாங்கத்தை அதிருப்தியடைய வைத்துள்ளன. எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு எமது அதிகபட்ச எதிர்ப்பை வெளியிடுகின்றோம். இதனால் அரசாங்கம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் சுதந்திரக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுதந்திரக் கட்சியின் பிரதிநிதியும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.