பிரதான செய்திகள்

வாழ்வாதார உதவி திட்டத்தில் இலாபம் உழைக்கும் அதிகாரிகள்! முசலி மக்கள் விசனம்

(முஹம்மட் இம்தீயாஸ்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற வாழ்வாதார உதவி பொருற்கள் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப,கோரிக்கைக்கு இணங்க உதவிகளை வழங்குவதில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கொள்வனவு செய்வதற்கு இலகுவாகவும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்,ஊழியர்களுக்கும் அதிக இலாபத்தை உழைக்க கூடிய பொருற்களை மக்களுக்கு வழங்குவாதாகவும் குற்றம் சுமத்துகின்றன.

குளிர்சாதன பெட்டிகள்,விவசாய உபகரணங்கள்,தண்ணீர் தாங்கிகள்,தண்ணீர் இறைக்கும் இயந்திரம் என வாழ்வாதர திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றது.

வாழ்வாதார உதவி தொகைக்கு ஏற்ப பெறுமதியான பொருற்கள் கூட மக்களுக்கு சென்றடைவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

பிரதேச செயலகத்தில் இருந்து உபகரணங்களை கொள்வனவு செய்யும் உரிய அதிகாரிகள் நேரடியாக வியாபார நிலையத்தில் வேலை செய்யும் உழியர்களை பிரதேச செயலகத்திற்கு அழைத்து வந்து பல மணி நேரம் ஒப்பந்த பேச்சுவார்தைகளை மேற்கொள்வதாகவும் அறியமுடிகின்றது.

இது போன்று கடந்த வருடம் மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் வாழ்வாத திட்டம் வழங்கிய போது பல லச்சம் ரூபா ஊழல்,மோசடி இடம்பெற்றது.அதில் முன்னால் பிரதேச செயலாளர்,தற்போதைய கணக்காளர்,சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடிகள் தொடர்பில் அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் கவனம் செலுத்துமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related posts

சமநிலையில் இலங்கை ,இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி

wpengine

மன்னார் – எருக்கலம்பிட்டி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine

முசலி மீனவர்களின் பிரச்சினை அமைச்சர் றிஷாட் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு

wpengine