பிரதான செய்திகள்

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

(அனா)

150வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலில் நாடலாவிய ரீதியில் பல்வேரு நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன.

இதன் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாமும் பொலிஸ் நடமாடும் சேவையும் இன்று (சனிக்கிழமை) வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் தினஸ் கருணாதிலக, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானஹே, அல் கிம்மா நிருவணனத்தின் பணிப்பாளர் அஷ்ஆஷக் எம்.எம்.எஸ்.ஹாறூன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி யசுந்த பெணான்டோ, சிவில் பாதுகாப்பு பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.unnamed (9)

இதில் பொலிஸாரும் பொது மக்களும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியதோடு பொது மக்கள் பொலிஸ் முறைப்பாடுகளை செய்து முறைப்பாட்டு பிரதிகளை உடன் பெற்றுக் கொண்டனர்.unnamed (8)unnamed (5)

Related posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் தெரிவின் மீளாய்வு

wpengine

சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட்டின் உருவ பொம்மையை எரித்து கல்லடியில் ஆர்ப்பாட்டம்!

Editor

புலிகள் காலத்தில் பாவிக்கப்பட்ட  கைக்குண்டு

wpengine