பிரதான செய்திகள்

வாழைச்சேனை-பிறைந்துரைச்சேனை ஹயாத்து முஹம்மட் மக்காவில் வைத்து ஜனாஷா

(அனா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை பகுதியில் இருந்து மக்காவுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற எஸ்.எல்.ஹயாத்து முஹம்மட் என்பவர் இன்று (21.08.2016) அதிகாலை மார்க்க கடமையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போது மரணமடைந்துள்ளதாக மரணமடைந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மக்காவுக்கு ஹஜ் கடமைக்காக கடந்த வாரம் தனது மனைவியுடன் சென்ற அவர் இன்று அதிகாலை மக்காவில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாகவும் அவரது ஜனாஸா நல்லடக்கம் மக்காவில் இடம் பெறவுள்ளதாகவும் குடும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

நான்கு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளுமாக ஆறு பிள்ளைகளின் தந்தையான அவர் இவர் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பரிகாரியார் வீதியில் வசித்து வந்தவராவார்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித் – 0774343461)

Related posts

எகிப்து மசூதியில் துப்பாக்கி சூடு! 230பேர் பலி

wpengine

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்

wpengine

கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் நடவடிக்கையை உடன் கைவிடுங்கள் – பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்

wpengine