பிரதான செய்திகள்

வாழைச்சேனை கறுவாக்கேணியில் மின் ஒழுக்கால் வீடு தீப்பிடிப்பு

(அனா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கறுவாக்கேணி பகுதியில் வீடொன்று மின் ஒழுக்கு காரணமாக சனிக்கிழமை காலை தீப்பிடித்து எரிந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கறுவாக்கேணி சண்முகலிங்கம் வீதியில் வசிக்கும் சுப்பிரமணியம் திருமஞ்சனா என்பவரின் வீடே இவ்வாறு தீப்பிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.

மின் ஒழுக்கு ஏற்படும் போது வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்தமையால் இதனை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டு சுமூக நிலைக்கு கொண்டு வந்ததுடன், அவரும் தீயில் காயமடைந்து வாழைச்சேனை ஆதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பியுள்ளார்.

இத்தீ விபத்து காரணமாக வீட்டின் சில மின்சார பொருட்கள், றப்பர் பொருட்கள் என்பன சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்வியினால் பலம் பொருந்திய நாடுகளை கூட இஸ்ரேல் ஆட்டிப்படைக்கின்றது அமைச்சர் றிஷாட்

wpengine

ஹஸன் அலிக்கு தேசியப்பட்டியல் கிடைத்திருந்தால் கரையோர மாவட்டம் கரையொதுங்கியிருக்குமா?

wpengine

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இப்தாரும் முஸ்தபா நினைவுப் பேருரையும்

wpengine