பிரதான செய்திகள்

வாழைச்சேனையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய விபத்து!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் தண்ணீர் பவுசர் வாகனத்தில், சைக்கிளில் பயணித்த சிறுவன் ஒருவன் சிக்கிய உயிரிழந்தார்.

நேற்று (29) இரவு 6.30 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமதுதெரிவிக்கப்படகின்றது.

சம்பவத்தில் ஓமனியாமடு 2ம் பரம்பரை பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே உயிரிழந்தார்.

குறித்த பிரதேசத்திலுள்ள மண் களுஞ்சியபடுத்தும் இடத்திற்கு மண்ணை கழுவுவதற்காக  தண்ணீர் கொண்டு சென்ற பவுசர் பின்புறம் நோக்கி பயணிக்க முற்பட்ட போது,  10 வயது அண்ணன் தனது 6 வயது தம்பியை சைக்கிள் ஒன்றில்   ஏற்றிவந்த நிலையில், பவுசரில் மோதிய விபத்தில் 6 வயதுடைய தம்பி உயிரிழந்ததுடன் அண்ணன்  உயிர் தப்பியுள்ளார்.

இதனையடுத்து பவுசரின் சாரதி மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் தண்ணீர் பவுசர் மீது தீவைத்ததையடுத்து பவுசர்  முற்றாக தீயில் எரிந்துள்ளது.

பின்னர் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் தப்பி ஓடிய சாரதி மற்றும் உதவியாளர் இருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்ததுடன் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுபாட்டிற்கு கொண்டுவந்ததுடன் மடக்கி பிடித்த சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்ததுடன் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை குறித்த மண் களஞ்சியப்படுத்தும் இடம் சட்டவிரோதமாக அனுமதி எதுவும் இன்றி இயங்கி வருவதாகவும் இதற்கு எதிராக பிரதேச மக்கள் சம்மந்தப்பட் அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்தபோதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம் -காத்தான்குடியில் முன்னெடுப்பு

wpengine

விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கள்

wpengine

இரண்டாம் தவணை கணிதப் பாட பரீட்சை வினாத்தாள் கசிவு!

wpengine