பிரதான செய்திகள்

வாழைச்சேனையில் பதற்றம்! பின்னனி யோகேஸ்வரனின் நிதி

வாழைச்சேனையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் வாக்குவாதத்தால் பெரும் பதற்றம் நிலவிவருவதாக அங்கிருந்து அறியமுடிகின்றது.

பஸ்தரிப்பிடம் ஒன்றை கட்டுவதற்கு வாழைச்சேனை பெற்றோல் நிலையத்திற்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிலையில், வாழைச்சேனையில் சகோதர இனத்தவர்கள் அந்த அத்திவாரத்தை மூடிவிட்டு, அதன் மேல் அவர்களது முச்சக்கர வண்டிகளை நிறுத்தி “இங்கே பஸ்தரிப்பிடம் கட்ட அனுமதிக்க மாட்டோம்” என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

வவுனியா உள்ளூராட்சி சபைகளின் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

சகல பாடசாலைகளும் நாளை முடங்கும்: இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு

wpengine

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பமைச்சின் கீழ்

wpengine