பிரதான செய்திகள்

வாழைச்சேனையில் திருட்டு சம்பவம்! தொடர்புடையோர் கைது

(அனா)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த மூன்று மாதங்களாக திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸாரால் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கடந்த (12.02.2017) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மீள் குடியேற்ற கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களாக திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுவந்த நிலையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர்களான விமலரத்ன, ரீ.மேனன், பொலிஸ் உத்தியோகத்தரான ஏ.எல்._னைட் ஆகியோர் அடங்கிய குழுவினர் சந்தேக நபரை கடந்த (12.02.2017) கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து நீர் இறைக்கும் இயந்திரம் பத்து (10) நீர் குழாய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டமுன தெரிவித்தார்.

Related posts

மன்னாரில் தீ விபத்து மின் சாதனப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

wpengine

வரி செலுத்துனர்களுக்கான அறிவித்தல்!

Editor

நல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

wpengine