செய்திகள்பிரதான செய்திகள்

வாழைசேனை பகுதியில் ஒருதொகை போதை பொருளுடன் இருவர் கைது .

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனையில் போதைப்பொருளுடன் (16.04.2025) இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பொலிஸ் குழுவினரே இவர்களைக் கைது செய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து 70g ஐஸ் போதைப்பொருள், 60g ஹெரோயின், 150g கேரள கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தைச்சேர்ந்தவர்கள் என்பதுடன், மிக நீண்ட நாட்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிய வருகின்றது. கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் சான்றுப்பொருட்களையும் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

வன விலங்குகள் மற்றும் இயற்கை வள அழிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

wpengine

மன்னார்- முசலி பிரதேசத்தில் அதிகமான மாடுகள் களவு போகின்றது! உரிமையாளர்கள் விசனம்

wpengine

வவுனியாவில் கிணற்றில் தவறி வீழ்ந்த இரு யானைகள்; ஒரு யானை உயிரிழப்பு!

Maash