யாழ் மாவட்ட சங்கானை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அராலி மத்தியில், அல்லியபுலம் தாரணன் முருக மூர்த்தி கோவில் வீதி அமைக்கும் பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ரூபாய் 1.2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு நேற்று மாலை 31-05-2016 மாலை 4.30 மணியளவில் வீதி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்விற்கு அமைச்சரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பிரதம பொறியியலாளர் முரளிதரன் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஓய்வு பெற்ற அதிபர்கள் இன்னும் பல முக்கியஸ்தர்களும், கிராம மக்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய ஓய்வுபெற்ற அதிபர்கள் சிலர் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் வீதி திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்க அல்லியபுலம் வந்த வேளையிலே தாம் இக் கோவில் வீதியை புனரமைத்துத் தருமாறு கேட்டவேளையிலே, நிச்சயமாக செய்து தருவேன் என்று வாக்குரைத்து சென்றார், பொதுவாக அரசியல் வாதிகள் வாக்குகொடுப்பார்கள் ஆனால் நிறைவேற்றுவது குறைவு ஆகவே அந்த வகையிலே சொன்ன சொல்லை சரியாக, சரியான நேரத்திலே கோவில் திருவிழா வேளைக்கு முன்னர் செய்து தர நிதி ஒதுக்கி வேலைகளை ஆரம்பித்து, கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ள அவரை தாம் பாராட்டுவதாகவும், அத்தோடு அமைச்சர் அவர்கள் ஒரு கிறிஸ்தவனாக இருந்தபோதும் எந்த மத பாகுபாடும் இல்லாது எல்லா மதங்களுக்கும் சம உரிமையும், எந்த ஒரு பிரதேச வாதமும் இன்றி எல்லா மாவட்டங்களுக்கும் சரியான அளவிலே நிதி ஒதுக்கீடுகளை செய்து வருவதையும் தாங்கள் பத்திரிகைகள் வாயிலாக அறிந்ததாகவும் தெரிவித்தார்.