அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

வாக்குச் சீட்டுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி நாளைய தினத்திற்குள் நிறைவடையும் என துணை தபால்மா அதிபர் பிரேமரத்ன ஹேரத் தெரிவித்தார்.

உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளைப் பெறாத வாக்காளர்கள் நாளை முதல் தங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் மூன்றாவது நாள் இன்றாகும். நாளைய தினம் தபால் மூல வாக்களிப்பின் இறுதி நாள் ஆகும்.

Related posts

விளக்கம் கோரியவர்களுக்கு சாப்பாடு கொடுத்த ஹக்கீம்! அரசியல் நாடகம்

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரை சந்தித்த குவைட் தூதுக் குழுவினர்.

wpengine

தேர்தல் தொடர்பில் அரச தேசிய புலனாய்வு தகவல்

wpengine