பிரதான செய்திகள்

வாக்காளர் படிவங்களை துரிதமாக நிரப்பி கையளிக்கவும்

2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைய பீ.சி. படிவங்களை துரிதமாக நிரப்பி கிராம சேவையாளர்களிடம் கையளிக்குமாறு பெப்ரல் அமைப்பு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.

எதிர்காலங்களில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் 2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, வாக்காளர்கள் குறித்த பதிவுகள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைய குறித்த பி.சி.படிவங்கள் வாக்காளர்களுக்கு தற்போதும் விநியோகிக்கப் படாதிருந்தால் கிராம சேவை அதிகாரிகளளை அணுகி குறித்த படிவங்களை பெற்றுக்கொள்ளுமாறு ரோஹன ஹெட்டியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

இஸ்லாத்திற்கு மாறிய ஷப்னம் பேகத்திற்கு நடைபெற்ற சோகம்

wpengine

பசில் தொடர்ந்தும் இப்படி செய்தால், நாட்டில் இரத்த களரி ஏற்படும்! எச்சரிக்கை

wpengine

மன்னார்,சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றக்கோரி 2வது நாள் மக்கள் போராட்டம்

wpengine