பிரதான செய்திகள்

வாக்காளர் இடாப்​பை திருத்தும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் ஆரம்பம்

2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தேர்தல்கள் அதிகாரிகளாக செயற்படும், கிராம சேவையாளர்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

25 மாவட்ட தேர்தல்கள் செயலகங்களையும் மையப்படுத்தி இந்த தெளிவூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் இடாப்புகளை மாவட்ட செயலகங்களிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மாத்தறை, கிரிந்த சம்பவத்தை பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்து.

wpengine

மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் மைத்திரி

wpengine

அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்த சவுதி

wpengine