பிரதான செய்திகள்

வாக்களித்த மக்களுக்கும்,றிஷாட் அமைச்சருக்கும் நன்றி! வட மாகாண சபை உறுப்பினர் அலிகான்

நன்றி நவிலல் 

 

அன்புடையீர் 

 

அஸ்ஸலாமு அலைக்கும் /வணக்கம்

 

 (ஊடகப்பிரிவு)

கடந்த 01/10/2017 திகதி தொடக்கம் கௌரவ கைத்தொழில் மற்றும் வர்த்தக வணிபத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காங்கிரசின் தேசிய தலைவருமான அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் சிபாரிசின் பேரில் வட மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

வட மாகாண சபையின் உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக நீங்கள் தந்த அன்பிற்கும் அக்கறைக்கும் அயராத உழைப்பிற்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளையும்,நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

எனது பதவிக்காலத்தில் அல்லாஹ்வின் துணையோடும் கௌரவ அமைச்சரின் ஆலோசனையோடும் தொடர்ந்து எனது நற்பணிகளை முன்னெடுப்பேனென உறுதியளிக்கின்றேன்.

மீண்டும் தாங்கள் தந்த அன்பிற்கும் மகத்தான ஆதரவிற்கும் வாக்களித்தமைக்கும் நன்றி கூறி நறைவு செய்கின்றேன்.

இப்படிக்கு 
தங்கள் அன்பான 
வட மாகாண சபை உறுப்பினர்
அலிகான் சரீப்

Related posts

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கி முகாமையாளரின் அராஜகம்! பயனாளி பாதிப்பு நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகள்

wpengine

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரிக்கும் கனடாவின் வரலாறு.

Maash

அனைத்து தேர்தல்களும் தாமரை மொட்டுச் சின்னத்தில்

wpengine