பிரதான செய்திகள்

வாகன விபத்து! பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப்பின் மகள்,மகன் வைத்தியசாலையில்

திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பயணித்த வாகனம் தம்புள்ளை, பெல்வெஹர பிரதேச்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் லொறி ஒன்றின் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், அவரின் மகள், மகன், வாகனத்தின் சாரதி மற்றும் அவரின் செயலாளர் ஆகியோர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் இருந்து திருகோணமலை நோக்கி புறப்படும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.2113134361mahroof-1

Related posts

யாழ். மாவட்டத்தின் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி வேட்பு மனு தாக்கல்.

Maash

கோத்தபாய ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளார்! பேஸ்புக் குழுவினை நாடும் கோத்தா

wpengine

பிரதியமைச்சர் ஹரீஸ் மல்லாக்காக படுத்து துப்புவதை போல் அமைந்திருக்கிறது

wpengine