செய்திகள்பிரதான செய்திகள்

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம், சுமார் 15,000 வாகனங்கள் காத்திருப்பு!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சுமார் 15,000 வாகனங்கள் இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்காக காத்திருப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அச்சிடும் நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்கு புதிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 15 நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க மேலும் தெரிவித்தார்.

Related posts

இளம் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை

wpengine

லிந்துலை தீ பரவலில் 10 வீடுகள் தீக்கிரை – 40 பேர் பாதிப்பு!

Editor

நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய விசேட குழு நியமனம்!-சபாநாயகர்-

Editor