வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இரண்டு ஆண்டுகள் வரையில் நீடிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிஞ்சிகே இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சந்தையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் அதிக விலைக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் நிதி இருப்புக்களில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், வாகனங்களை அதிக விலைக்கு வாங்க வேண்டாமெனவும் சம்பத் மெரிஞ்சிகே வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையின் காரணமாக 40 வீதமான கார் விநியோகஸ்தர்கள் திவாலாகிவிட்டனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.