அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை 1 முதல்.

அனுமதியின்றி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை மாதம் 1ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கான உப பொலிஸ் பரிசோதகர் (DIG) இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் அறிவித்தலின்படி, இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த விசேட நடவடிக்கையின் போது, வாகனங்களில் அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள அதீத ஒளி விளக்குகள், அதீத ஒலிகளை வெளியிடும் ஸ்பீக்கர்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் போன்ற உதிரிபாகங்கள் அகற்றப்படும்.

இந்த தேவையற்ற உதிரிபாகங்கள், விபத்துகள் நேரும்போது வீதி பயணிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

“2024ஆம் ஆண்டில் மாத்திரம் 815 பேர், குறிப்பாக நடைபயணிகள், வீதி விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 முதல் 28 வயதுக்கிடையில் உள்ள சுமார் 800 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருந்தோர் உயிரிழந்தனர்.

மேலும் , இந்த ஆண்டில், வீதி போக்குவரத்து திணைக்களம் 8,788 வாகனங்களை பொது வீதிகளில் ஓட்டத் தகுதி இல்லாதவை என அடையாளம் கண்டுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில்,மஹிந்த அணி நாளை சந்திப்பு

wpengine

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

wpengine

பனாமா பேப்பர்ஸில் 46 இலங்கையரின் ஊழல் விபரங்கள்: 13 முஸ்லிம்கள், 05 தமிழர்கள் உள்ளடக்கம்

wpengine