செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா A9 வீதி பாலம் அமைக்கும் பணி தாமதம், பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் பொதுமக்கள்..!

வவுனியா ஏ9 வீதியில் பாலம் அமைக்கும் பணி தாமதமானதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

ஏ9 வீதியில் வவுனியா மாநகர சபை மைதானத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முன்னெடுக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை
பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடக்கின்ற நிலையில் பாலம் பூரணமாக அமைக்கப்படாமல், அவ்வீதியூடாக பயணிப்பதில் பொதுமக்களும் வாகன சாரதிகளும் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அவ்வீதி பிரதான வீதியாக உள்ள காரணத்தினால் அதிகமான வாகனங்கள் அந்த வீதியை பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் பாலம் அமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அந்த பகுதியில் தினமும் பொதுமக்கள் பலவாறு நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.

எனவே இவ்விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

Editor

மூன்று ஆண்டுகள் பூர்த்தியான வடமாகாண சபை மக்கள் கண்ட நன்மை என்ன? க.சிவநேசன்

wpengine

மதம்,இனம் அடிப்படையாக கட்சிகளை பதிவு செய்ய முடியாது.

wpengine