பிரதான செய்திகள்

வவுனியா வெங்கள செட்டிகுளம் பிரதேச சபையின் பிரதி தலைவர் ஐக்கிய தேசிய கட்சி வசம்

வவுனியா வெங்கள செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளராக சுதந்திர கட்சியில் போட்டியிட்ட சிறீரெலொ கட்சியினை சேர்ந்த ஆசீர்வாதம் அந்தோணி அவர்கள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழரசு கட்சியினை சேர்ந்த சுப்பையா ஜெகதீஸ்வரன் மற்றும் சுதந்திர கட்சியின் ஆசீர்வாதம் அந்தோணி அவர்கட்கும் இடையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அந்தோணி அவர்கட்கு 7வாக்குகளும் ஜெகதீஸ்வரன் அவர்கட்கு 6வாக்குகளும் வழங்கப்பட்டு அந்தோணி அவர்கள் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதில் சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி,பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அந்தோணி அவர்கட்கும், தமிழரசு கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன் அவர்கட்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் அத்துடன் தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன நடுநிலைமை வகித்தனர்.

மேலும் உப தவிசாளர் பதவியிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் நவரட்ணம் சிவாஜினி மற்றும் சிவசுப்ரமணியம் அருள்கரன் ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் சிவாஜினிக்கு ஏழு வாக்குகளும் அருள்கரனுக்கு ஆறு வாக்குகளும் பதிவாகின இதில் ஐக்கிய தேசிய கட்சியின் சிவாஜினி அவர்கள் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதில் சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி,பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் சிவாஜினி அவர்கட்கும்,தமிழரசு கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அருள்கரன் அவர்கட்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் அத்துடன் தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன நடுநிலைமை வகித்தனர்.

Related posts

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை

wpengine

“அரசில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்காகக் கதவுகள் திறந்துள்ளன” -மஹிந்த

wpengine

சமுர்த்தி பயனாளர்களை தொழில்முனைவோராக மேம்படுத்துங்கள் பிரதமர் ராஜபக்ஷ

wpengine