பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா விதை வங்கிக்கு சென்ற வெளிவிவகார அமைச்சர்.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்தன இன்று வவுனியா- செட்டிகுளத்தில் உள்ள சமூக விதை வங்கிக்கு விஜயம் செய்திருந்தார்.


சமூக விதை வங்கியின் ஊடாக செட்டிகுளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன் நாட்டின் பசுமை செயற்றிட்டத்திற்காக பங்களிப்பு செய்த பயனாளிகளுக்கு சமூக விதை வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சான்றிதழும் பணப்பரிசும் வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.


இதேவேளை பயனாளிகளின் வீடுகளிலும் பயன்தரு மரக்கன்றுகளை நாட்டிவைத்திருந்ததுடன் நல்லின விதைகளும் இதன்போது பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேன்ராகவன், கு. திலீபன் மற்றும் கே. மஸ்தான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

மக்கள் உள்ளாடைகளை அணியாமல் தியாகம் செய்ய வேண்டும் – கொள்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்

wpengine

வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞரின் சடலம்..!

Maash

3 கோடி பணத்தி்ல் புதிய புத்தர் சிலை

wpengine