Breaking
Sat. Nov 23rd, 2024
(செட்டிகுளம் சர்ஜான்) 
வவுனியா வாழவைத்தகுளம் அல் மினா சிறுவர் பாடசாலை மற்றும் அல்ஹிஜ்ரா இளைஞர் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கலை கலாசார மற்றும் விளையாட்டுப்போட்டிகள் கடந்த (2) சனிக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

காலையில் சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் இடம்பெற்றதுடன் மாலை 2 மணியளவில் அல் மினா சிறுவர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் போட்டிகள் இடம்பெற்றதுடன், கிராமத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கயிறிழுத்தல் போட்டி 16 வருடங்களுக்கு பின்னர் கிராமத்தில் அரங்கேறியது.

அத்துடன் சிறுவர்களின் வினோத உடை கண்காட்சி வருகை தந்த விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியதுடன் நிகழ்வின் இறுதியில் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், முன்பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டன. 7f0527b0-0420-418f-a904-13162b93e0c0

குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எம் சாஜிதீன் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினராக செட்டிகுளம் பிரதேசத்தின் முதலாவது முஸ்லிம் சட்டத்தரணியான சர்ஜூன் நூர்டீனும், சிறப்பு விருந்தினர்களாக கிராமத்திலுள்ள அமைப்புகளின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

e6034a0e-d580-4f8a-941c-44d5035c21b2 e6034a0e-d580-4f8a-941c-44d5035c21b2

குறித்த நிகழ்வுக்கான நிதி உதவியை கிராமத்திலிருந்து சென்று வெளிநாடுகளில் பனிணி புரியும் சகோதரர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *