பிரதான செய்திகள்

வவுனியா வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்கும் வட மாகாண சபை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு நேற்றைய தினத்தை துக்க நாளாக வடமாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களை மதியம் 12.00 மணிவரை மூடுமாறு வர்த்தக சங்கம், வர்த்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஆனால் வவுனியா நகரில் பெரும்பாலான கடைகள் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மதியம் 12.00 மணிக்கு பின்னர் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வர்த்தக சங்கத்தினர் நேற்று கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நானாட்டன் பாடசாலையில் உலக சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் (படம்)

wpengine

ஜனாதிபதி பதவியேற்று 10 நாட்கள்! இன்று என்ன நடக்கிறது

wpengine

கெய்லின் சாதனை முறியடிப்பு

wpengine