Breaking
Mon. Nov 25th, 2024

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா நேற்று புளியங்குளம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் ஐ. எம்.ஹனீபா பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

புளியங்குளம் கிருஸ்ணன் கோவிலில் இருந்து பண்பாட்டு பேரணி ஆரம்பித்து விழா மண்டபம் வரை வந்திருந்தது.

பண்பாட்டு பேரணியில் மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியும், தமிழர்களின் பண்பாட்டை பறை சாற்றும் சமையல் உபகரணங்கள் மற்றுமோர் ஊர்தியில் கொண்டு வரப்பட்டது.

நாதஸ்வர குழுவினர், பொய்க்கால் குதிரை ஆட்டம், காவடி, கோலாட்டம் உட்பட பண்பாட்டு நிகழ்வுகளும் தமிழ் பெரியார்களை போன்று வேடமணிந்த சிறுவர்களும் பவணியை அலங்கரித்திருந்தனர்.

மாவீரன் பண்டாரவன்னியன் அரங்கில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மருதமுகில் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது வவுனியா வடக்கு பிரதேசத்தின் சமூக கலை, கலாசார துறையில் பங்களிப்பு செய்தவர்களுக்கு சமூக நலனோம்பி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *