பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்.

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் இன்று காலை பத்து மணியளவில் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது 35 வயதிற்கும் மேற்பட்டவர்களை நியமனங்களில் உள்ளீர்க்க வேண்டும், 2017 வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உள்வாங்குதல் வேண்டும், பட்ட சான்றிதழ் இறுதித் திகதியின் அடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படுதல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எதிராக வேலையற்ற பட்டதாரிகள் மீது நீர் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்திற்கும் இதன்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சின் உப அலுவலகம் மாங்குளத்தில் திறந்து வைப்பு

wpengine

கற்பிட்டி கடற்கரையில் 3 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

Maash

வட பகுதி மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்த கோரிக்கை

wpengine