பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கு எதிராக வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புக்கலை சங்கத்தின் தலைவர் எஸ். நந்தகுமார் தலைமையில் முறைப்பாடு ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊழியர்கள் ஒன்று கூடல் நிகழ்வில் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களின் கௌரவிப்பு நிகழ்வு, ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தை சேர்ந்த வீரர்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பல பதக்கங்களை பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த குத்துச்சண்டை வீர, வீராங்கனைகளே உத்தியோகத்தருக்கு எதிராக கையெழுத்திட்டு முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த மூன்று வருடங்களாக அரசாங்கத்தினால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள், சலுகைகள் மற்றும் தேசிய ரீதியில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்களை தெரிவிப்பதில்லை எனவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கு எதிரான முறைப்பாட்டை வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் எம்.ஆர்.பிரியதர்சன பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாவனல்லை இரு புத்தர் சிலைகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

wpengine

அமெரிக்காவில் வாழும் பெண்ணை திருமணம் முடித்த ரம்புக்வெல்லவின் புதல்வன்

wpengine

முஸ்லிம்கள் கடந்த காலத்தில் உரிமைக்காக போராடி எதனையும் இழக்கவில்லை

wpengine