பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட விருந்தினர் விடுதியொன்றி சடலம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றிலிருந்து இன்று மாலை 3 மணியளவில் இளைஞனொருவனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். 

 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய அந்தோனி நிக்சன் என்ற இளைஞனின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

இவரின் சடலத்திற்கு அருகே நஞ்சருந்தி தற்கொலை செய்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா தடவியல் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இந்திய வீடமைப்புத் திட்டத்தை விஸ்தரிக்கக்கோரி மெளன விரதம்

wpengine

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிக்கை

wpengine

சிகிரியா குகைக்கு செல்லும் படிகளை சீரமைக்க 4 கோடி நிதி உதவியை வழங்கிய யுனெஸ்கோ!

Editor