பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் மதுபோதை

வவுனியா – நெளுக்குளம் பொலிஸாரால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தாதிய உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.ஸ் அத்தனாயக்க தலைமையிலான குழுவினர், மாட்டுச்சந்திக்கு அருகே நேற்றிரவு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 28, 30 மற்றும் 31 வயதுடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களை நாளைய தினம் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Related posts

மொட்டு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மஹிந்த நீங்க வேண்டும்

wpengine

வவுனியாவில் கல்வி தொடர்பான உதவி தொடர்புகொள்ளுங்கள்

wpengine

மடு,தேவன் பிட்டி பாடசாலையினை திறந்து வைத்த கல்வி அமைச்சர்

wpengine