பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபர் நியமனம்

வவனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன இன்று  காலை 8.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வந்த புதிய அரசாங்க அதிபரை முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திணைக்கள அதிகாரிகளால்  வரவேற்கப்பட்டார்.

வரவேற்பின் பின்னர் தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக்கொடியேற்றல், மங்களவிளக்கேற்றல்,என்பன சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றன

புதிய அரசாங்க அதிபரிற்கு சமயத் தலைவர்களின் ஆசி வழங்கப்பட்டு, பதவியேற்பு இடம்பெற்றது.

 

புதிய அரசாங்க அதிபராக பதவியேற்ற பின் மாவட்ட செயலக அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்று கொண்டார் சோமரத்தின விதான பத்திரன

Related posts

சமூகவலைத்தளத்தில் அரச உத்தியோகத்தர்களை விமர்சிக்க தடை

wpengine

மஹிந்தவை இழுத்த மைத்திரி

wpengine

வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்த புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் த.சிவபாலன்

wpengine