பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட செயலகத்தில் முற்றுகை

வவுனியா மாவட்ட செயலகத்தில் வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை முதல் மாலை வரை அலுவலகத்தை பொதுமக்கள் நீண்ட நேரமாக முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச்சபையினால், வவுனியா மாவட்ட அலுவலகத்தில் வாழ்வாதார உதவிகள் பெற்றுக்கொள்வதற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வவுனியாவின் பல கிராமங்களிலிருந்தும் இன்று காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தமக்கான வாழ்வாதர உதவிகளைப் பெற்றுக்கொள்ள ஆவணங்கள் அலுவலகரினால் பரிசோதனைக்குட்டுபடுத்தப்பட்டு உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் நீண்ட நேரமாக அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொலன்னாவ குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் 750 உணவு பொதிகள் வினியோகம்

wpengine

முஸ்லிம்களைப் பழிவாங்கும் மனநிலையில்தான் இந்த அரசு நடந்துகொள்கிறது- றிஷாட்

wpengine

வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் நான்கு பேரின் பணித்தடையை நீக்கக்கோரி கடிதம்.

wpengine