பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட! வீட்டு திட்ட பயனாளிகள்

வவுனியா – சாந்தசோலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கக் கோரி இன்று முற்பகல் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்ததுடன், வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடொன்றையும் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அந்த மக்கள் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில்,

 

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் சாந்தசோலை கிராமத்தில் 168 குடும்பங்கள் மீள்குடியேறி வசித்து வரும் நிலையில், 36 குடும்பங்கள் தொடர்ந்தும் கொட்டில் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

கடந்த 10 வருடங்களாக வீட்டுத்திட்டத்திற்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்தும் வீடுகள் வழங்கப்படவில்லை.

 

இந்தியாவிற்கு அகதிகளாக சென்று திரும்பிய மக்களும் யுத்தத்தின் காரணமாக அங்கவீனர்களானவர்களும், வசித்து வரும் நிலையில் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.

இந்த நிலையில் எதிர்வரும் ஆவணி மாதம் 11ஆம் திகதி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி றோகண புஸ்பகுமார எமது கிராமத்திற்கு வருகை தந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு தருவதாக கூறியுள்ளார் என அந்த மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

Related posts

தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று முதல்

wpengine

கவிஞர் ஏ.இக்பாலின் மறைவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

wpengine

அரச ஊழியர்களுக்காக குரல் கொடுக்கும் ஊழல் எதிர்ப்பு முன்னணி

wpengine