எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வவுனியா மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் (06) வவுனியாவில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில், கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் மற்றும் வேட்பாளர்கள், கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.