வவுனியா மாநகரத்தின் மணிக்கூட்டு கோபுரத்திற்கான எண்ணிம (Digital) கடிகாரம் உத்தியோகபூர்வமாக இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா மாநகர சபையின் கௌரவ முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பணிப்புரையின் பேரில், வவுனியா மாநகர சபையின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட எண்ணிம கடிகாரம் நிர்மாணிக்கப்பட்டு இன்றையதினம் மக்களின் பார்வைக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், கௌரவ மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
