பிரதான செய்திகள்

வவுனியா மருத்துவமனையில் பாலியல் தொல்லைகொடுக்கும் வைத்தியர்.

வவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தனக்கு பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக நேற்று (18.06) இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த வைத்தியரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணொருவர் நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த தனியார் மருத்துவமனைக்கு தினசரி நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை கொண்டு சென்று வழங்குவது வழமை.

அதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருத்துவ அறிக்கைகளை எடுத்து சென்ற குறித்த பெண்ணை அவ் மருத்துவமனையின் வைத்தியர் பாலியல் ரீதியான தொந்தரவு செய்துள்ளார்.

அதனையடுத்து குறித்த பெண் அங்கிருத்து தப்பித்து வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனாலும் பயத்தில் இவ்விடயத்தினை வீட்டாருக்கு தெரிவிக்கவில்லை .

பின்னர் குறித்த தனியார் மருத்துவமனையின் வைத்தியர் அவ் பெண்ணிற்கு குறுந்தகவல் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
அதையடுத்து நேற்று குறித்த பெண் சம்பவத்தினை பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதனையடுத்து நே்றிரவு 10.00 மணியளவில் பெற்றோர் அப்பெண்ணை அழைத்து சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டனர்.

பாலியல் தொந்தரவுக்குள்ளாகிய பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வைத்தியரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வைத்தியர் மீது முன்னரும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

4 அரசியல் கட்சிளுக்கு தேர்தல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு!

Editor

பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்க முடிவு!

Editor

உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் நாளை விசாரணை

wpengine