பிரதான செய்திகள்

வவுனியா மசாஜ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கீழ் உள்ள நெழுக்குளம் பகுதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

குறித்த மசாஜ் நிலையம் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினால் இன்று காலை 11 மணியளவில் மூடப்பட்டுள்ளது.

தெற்கு பிரதேச சபையின் தவிசாளர், து. நடராஜசிங்கம்(ரவி) மற்றும் உப தவிசாளர் மகேந்திரன் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள் அப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது, பிரதேச சபை குழுவினர் சரியான அனுமதி பெறாமலே இதுவரை காலமும் இயங்கி வந்த குறித்த மசாஜ் நிலையத்தை மூடியதுடன் பெயர் பலகையையும் அகற்றியுள்ளனர்.

Related posts

மௌலவி இல்யாஸின் செயல் இலங்கையிலுள்ள அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

wpengine

உப்புக்குளம் வடக்கு சமூர்த்தி நூலகம் திறந்துவைப்பு

wpengine

ரணிலின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளது.

wpengine